சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 11:02 AM IST (Updated: 9 Oct 2019 11:02 AM IST)
t-max-icont-min-icon

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை குறித்து வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

புதுடெல்லி

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட  சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மோடி - சீன அதிபர் வருகையையொட்டி  இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி  ஜின்பிங் வரும் 11, 12ம் தேதிகளில் இந்தியா வருவதை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11, 12ம் தேதிகளில் இந்தியா வருகை; பல்வேறு துறைகளில் இருதரப்பு விவகாரங்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் விவாதிக்கவுள்ளனர்  என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story