ஜி ஜின்பிங் -பிரதமர் மோடி சந்திப்பு: சீனா காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியது


ஜி ஜின்பிங் -பிரதமர் மோடி  சந்திப்பு:  சீனா காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியது
x
தினத்தந்தி 9 Oct 2019 8:08 AM GMT (Updated: 9 Oct 2019 8:08 AM GMT)

ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பின் மூலம் சீனா காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரில்  சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது சட்டபிரிவை நீக்கிய பின் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க சீனா இஸ்லாமாபாத்தை ஆதரித்தது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த மாதம் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றியபோது, காஷ்மீர் பிரச்சினை கடந்த காலத்திலிருந்து எஞ்சிய ஒரு சர்ச்சை, ஐ.நா. சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி அமைதியாகவும், ஒழுங்காகவும் தீர்க்கப்பட வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில் சீனா சென்ற  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா ஆகியோரின் முன்னிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையை மேம்படுத்தவும் பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தவும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நாங்கள் அழைக்கிறோம். இது இரு நாடுகளின் நலன்களுக்கும் உலகின் பொதுவான அபிலாஷைகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளது என கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை தனித்தனி  வழிகளில் முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான கடந்த ஆண்டு வுஹான் முறைசாரா உச்சிமாநாட்டைப் பற்றி அவர் குறிப்பிட்டார், "எங்கள் இருதரப்பு உறவுகளில் நல்ல வேகம் ஏற்பட்டுள்ளது, நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை முன்னேற்றி வருகிறோம், வேறுபாடுகள் மற்றும் முக்கியமான பிரச்சினைகளை முறையாக நிர்வகித்து வருகிறோம். என கூறினார்.

ஐநா பொதுக்குழுவில் அதன் நிலைப்பாடு குறித்து சீனத் தலைமைக்கு இந்தியா தெரிவித்த கடுமையான அதிருப்தியின் காரணமாக  காஷ்மீர் மீதான சீன நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு உள்ளது.  

இருப்பினும், இந்த சீன நிலைப்பாடு இறுதியானதாக இருக்காது. பல இந்திய அரசியல்வாதிகள் அரசியலில் என்ன செய்கிறார்கள் என்பதை எடுத்துக் கொள்ளுங்கள் அது போல் சீனா  சர்வதேச இராஜதந்திரத்திலும்  அரசியல்  செய்கிறது.

Next Story