உத்தர பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு


உத்தர பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 9 Oct 2019 1:16 PM GMT (Updated: 9 Oct 2019 1:16 PM GMT)

உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார்.

இதையடுத்து,உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பாஜக சார்பில் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில்  காலியாக உள்ள மாநிலங்களவை 
உறுப்பினர் பதவிக்கு  நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து இன்று அவர் பெற்றுக் கொண்டார்.

Next Story