பாரீஸ் நகரில் ரபேல் விமானத்துக்கு பூஜை செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம்


பாரீஸ் நகரில் ரபேல் விமானத்துக்கு பூஜை செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 10 Oct 2019 3:52 AM IST (Updated: 10 Oct 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

பாரீஸ் நகரில் ரபேல் விமானத்துக்கு பூஜை செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமானம் ஒன்றை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. பாரீஸ் நகரில் இதை பெற்றுக்கொண்ட ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அதில் பூ, தேங்காய் வைத்து பூஜை செய்தார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், ‘இது ஒரு நாடக அரசு. நீங்கள் பிரான்சுக்கு சென்று பூஜை செய்கிறீர்கள். வெளிநாட்டுக்கு சென்று நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள். ரபேல் விமானம் இந்தியாவுக்கு வரவில்லையா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரத்தை வைத்து பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.


Next Story