இனி ஜியோவிலிருந்து அழைத்தால் கட்டணம்
ஜியோ எண்ணிலிருந்து, வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நெட்வொர்க் அனைத்தும் இலவசம் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் சில வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான டேட்டா, அன்லிமிட்டட் கால்கள் போன்றவைகளை குறிப்பிட்ட தொகைக்குள் வழங்க, மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி மெல்ல மெல்ல பாதிக்க துவங்கியது. அதே நேரத்தில் ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது.
இந்நிலையில் டிராயின் புது விதிப்படி, ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதில் கூடுதலாக இலவச டேட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச அவுட் கோயிங் வசதியை செய்து கொடுப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மற்ற நிறுவனங்களுக்கு (இண்டெர்கனைக்ட் யூசேஜ் சார்ஜ்) என்று ரூ.13 ஆயிரத்து 500 கோடியை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story