மனைவி மர்மச்சாவு வழக்கு: வெளிநாடு செல்ல சசிதரூருக்கு கோர்ட்டு அனுமதி
மனைவி மர்மச்சாவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிதரூர் வெளிநாடு செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் எம்.பி.யின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசிதரூர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனைப்படி, அவருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது.
இந்நிலையில், செர்பியா, குவைத், ஆஸ்திரேலியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு செல்ல அழைப்பு வந்திருப்பதால், அதற்கு அனுமதிக்குமாறு டெல்லி கோர்ட்டில் சசிதரூர் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வெளிநாடு செல்ல நவம்பர் 11-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ரூ.2 லட்சம் வைப்புத்தொகை செலுத்துமாறும், திரும்பி வந்த பிறகு அப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.

Related Tags :
Next Story