தேசிய செய்திகள்

யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு + "||" + UPSC Impersonation of choice: CBI on Revenue Officer Case

யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு

யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு
யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்த விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி,

பீகாரின் பெட்டியா பகுதியை சேர்ந்த ராஜே‌‌ஷ் குமார் சர்மா என்பவர் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2007-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய்த்துறை (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரியான இவர் கடந்த 1980-ம் ஆண்டு பிறந்தவர். 1996-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு இவர் வயது வரம்பு கடந்திருந்ததால், தன்னைவிட 5 வயது குறைவான நவ்நீத் குமார் என்பவரின் அடையாளங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தேர்வு எழுதி பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக பெட்டியா கிராம அதிகாரி, துணை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் வழங்கிய சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நவ்நீத் குமார் என்ற பெயரில் இருந்த ராஜே‌‌ஷ் குமார் சர்மா, மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து ராஜே‌‌ஷ் குமார் சர்மா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை
நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
2. அமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் - எல்லை பாதுகாப்பு படை விமானி ராஜினாமா
அமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, எல்லை பாதுகாப்பு படை விமானி ஒருவர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளார்.
3. டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக விசாரணை: கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திடுக்கிடும் தகவல்
நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய வாணியம்பாடி டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்து இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
4. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை: உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டதாக தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
5. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எழுதிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.