காஷ்மீர்: போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை நாளை மறுநாள் முதல் மீண்டும் வழங்க முடிவு எனத் தகவல்
காஷ்மீரில் போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை நாளை மறுநாள் முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சி்றப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு வதந்திகள் பரவி வன்முறைகள் பரவாமல் இருப்பதற்காக இண்டர்நெட் உள்பட தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டன.
இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 69 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு இன்னமும் முழுமையான இயல்பு நிலை எட்டவில்லை. அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகள் மீண்டும் ஜம்மு காஷ்மீர் வருகை தருமாறு கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில அரசு நிர்வாகம் அறிவித்தது. தரைவழி தொலைபேசி தொடர்பு சேவைகள் வழங்கப்பட்ட நிலையில், இன்னமும் மொபைல் சேவை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மொபைல் இணைய சேவை தற்போதைக்கு வழங்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story