தேசிய செய்திகள்

டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு - அரவிந்த் கெஜ்ரிவால் + "||" + Women will be exempted from odd-even scheme: Delhi CM

டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு அளிப்பதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

காற்று மாசுபடுவதை குறைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டமான ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தபட்ட பிறகு டெல்லியில் காற்று மாசுபடுவது கணிசமாக குறைந்திருப்பதாக டெல்லி அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.


கடந்த மாதம் செப்டம்பர் 13-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான 7 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், "தலைநகர் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டைக் குறைக்க மீண்டும் வரும்  நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,  டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால்  இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

தனியாக வாகனம் ஓட்டும் பெண்களுக்கும் அல்லது மொத்தமாக பெண்கள் மட்டும் காரில் பயணிப்பவர்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள தாய்மார்கள் அல்லது பெண் உறவினர்களுக்கும் இந்த வாகன கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், அவர் இந்த முடிவு பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்பு போல் எரிவாயுவை பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்த முறை விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டது.

இரு சக்கர வாகனங்களுக்கு இந்த திட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை, நாங்கள் நிபுணர்களை கொண்டு ஆலோசித்து வருகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.