ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல்
ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் மராட்டியத்தில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியை ஆதரித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று யவத்மால் மாவட்டம் உமர்கெட் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி வந்துள்ளதாக அறிந்தேன். அவர் மராட்டியத்திற்கு வந்து இருக்கிறார் என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகி விட்டது.
ராகுல்காந்தி எந்த கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரோ அந்த கட்சி தோல்வியை தான் சந்திக்கும். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் தோல்வி உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story