தாமரை சின்னத்தை அழுத்தினால் தானாக பாகிஸ்தான் மீது அணு குண்டு வீசப்படும் என்று அர்த்தம் -துணை முதல் மந்திரி சர்ச்சை பேச்சு


தாமரை சின்னத்தை அழுத்தினால் தானாக பாகிஸ்தான் மீது அணு குண்டு வீசப்படும் என்று அர்த்தம் -துணை முதல் மந்திரி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:05 AM IST (Updated: 14 Oct 2019 11:05 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால், அது தானாக பாகிஸ்தான் மீது ஒரு அணு குண்டு வீசப்படுவதாக அர்த்தம் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசி உள்ளார்.

தானே,

உத்தரபிரதேச துணை முதல்- மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நேற்று  மராட்டிய மாநிலம்  தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்  370-வது சட்டப்பிரிவு ரத்து  செய்யப்பட்ட பின்னர் நாட்டில் நடக்கும்  முதல் தேர்தல்கள் இதுவாகும் என்பதால், வரவிருக்கும் மராட்டியம் மற்றும் அரியானா சட்டமன்றத் தேர்தல்கள் மிக முக்கியமானவை.

மக்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால், அது தானாகவே பாகிஸ்தான் மீது ஒரு அணு குண்டு வீசப்படும் என அர்த்தம். தயவுசெய்து பாஜகவுக்கு  வாக்களித்து மராட்டிய மாநிலத்தில் எங்கள் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள். வரவிருக்கும் தேர்தல்களில் தாமரை நிச்சயமாக மலரும் என்று  நான் நம்புகிறேன்.

லட்சுமி தேவி பனைமரத்திலோ, சைக்கிளிலோ அல்லது  கடிகாரத்திலோ உட்காரவில்லை, மாறாக அவள் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள். 370-வது பிரிவு தாமரையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தாமரை என்பது வளர்ச்சியின் சின்னம் ஆகும் என்று கூறினார்.

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.

Next Story