ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது! -என்ஐஏ தகவல்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது என தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
தேசிய புலனாய்வு குழுவின் பொதுக்குழு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசும்போது தேசிய புலனாய்வு ஐஜி அலோக் மிட்டல் கூறியதாவது:-
ஐ.எஸ். அமைப்போடு தொடர்புடைய 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கேரளாவில் 17 பேரும், உத்தரபிரதேசத்தில் 19 பேரும், தெலுங்கானாவில் 13 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இலங்கையில் நடந்த ஈஸ்டர் தின குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பது எங்களுக்குத் தெரியும். கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்குகளில் சஹ்ரான் ஹாஷிமின் வீடியோக்களால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் ஒப்புக் கொண்டுள்ளனர் என கூறினார்.
Related Tags :
Next Story