அமித்ஷாவுக்கு திடீர் உடல்நல குறைவு - தேர்தல் பிரசாரம் ரத்து


அமித்ஷாவுக்கு திடீர் உடல்நல குறைவு - தேர்தல் பிரசாரம் ரத்து
x
தினத்தந்தி 14 Oct 2019 11:39 PM IST (Updated: 14 Oct 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

சண்டிகர்,

பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமித்ஷாவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் ஓய்வெடுத்தார்.

அரியானாவில் வருகிற 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து 3 இடங்களில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. குறிப்பாக பதேகாபாத், சிர்சா, ஹிசார் போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் உடல்நல குறைவு காரணமாக இந்த கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு பதிலாக பதேகாபாத் மற்றும் சிர்சாவில் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் பிரசாரம் செய்தார். அமித்ஷா இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. 

Next Story