தேசிய செய்திகள்

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா + "||" + Omar and Mehbooba detained under PSA… had to take precautions: Amit Shah

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா
உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
புதுடெல்லி,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அம்மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஜம்மு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  ஆனால், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில்,  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். அதேவேளையில், இருவரும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்களா? என்பது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அம்மாநில மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2. அமித்ஷாவுடன் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார்.
3. உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பாய்ந்தது பொது பாதுகாப்பு சட்டம்
பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
4. ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
ஜாமியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5. குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா? மம்தா பானர்ஜி, ராகுல்காந்திக்கு அமித்ஷா சவால்
குடியுரிமை திருத்த சட்டத்தில், இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா என மம்தா பானர்ஜி மற்றும் ராகுல்காந்திக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.