இன்று அப்துல்கலாம் பிறந்தநாள் -உருவச்சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை


இன்று அப்துல்கலாம் பிறந்தநாள் -உருவச்சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
x
தினத்தந்தி 15 Oct 2019 11:54 AM IST (Updated: 15 Oct 2019 11:54 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா இன்று நாடெங்கும் கொண்டாடப்படும் நிலையில் அவரது உருவச்சிலைக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) பவனில் உள்ள அப்துல்கலாம் உருவச்சிலைக்கு  பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் ராஜ்நாத் சிங்குடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story