காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து : பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை "முற்றிலுமாக ஒழிக்க" உதவும் -அமித் ஷா


காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து : பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உதவும் -அமித் ஷா
x
தினத்தந்தி 15 Oct 2019 2:05 PM IST (Updated: 15 Oct 2019 2:05 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சிறப்பு 370-வது பிரிவு ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை "முற்றிலுமாக ஒழிக்க" உதவும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.

புதுடெல்லி 

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான என்.எஸ்.ஜியின் 35-வது எழுச்சி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில்  தேசிய பாதுகாப்பு படை  ஒத்திகை  நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதாவது;-

ஜம்மு காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சிறப்பு பிரிவை ரத்து  செய்ததற்கான சமீபத்திய முடிவு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான்  ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை "முற்றிலுமாக ஒழிக்க" உதவும்.

பயங்கரவாதத்தின் மீது "சகிப்புத்தன்மை இல்லை" என்ற கொள்கையில் தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த இலக்கை அடைய தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) ஒரு முக்கிய கருவியாகும்.

370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், பல ஆண்டுகளாக நமது  அண்டை  நாடு (பாகிஸ்தான்) செய்த பினாமி போர் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக, இந்த நடவடிக்கை காஷ்மீர் மற்றும் பிராந்தியத்தில் எப்போதும் நிலையான  அமைதியை உறுதி செய்யும் என கூறினார்.

Next Story