பீகார் வெள்ள பாதிப்பு ;அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை- நிதிஷ் குமார்


பீகார் வெள்ள பாதிப்பு ;அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை- நிதிஷ் குமார்
x
தினத்தந்தி 16 Oct 2019 6:47 AM IST (Updated: 16 Oct 2019 6:47 AM IST)
t-max-icont-min-icon

பீகார் வெள்ள பாதிப்பின் போது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்க எடுக்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னா,
 
பீகாா் தலைநகா் பாட்னாவில் மழை-வெள்ளத்தின் போது,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக,  அங்குள்ள பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. தலைநகா் பாட்னாவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மழை ஓய்ந்த பிறகும், பல இடங்களில் தண்ணீா் தேங்கி நின்றன. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகினா். 

இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் தொடா்பாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் பாட்னாவில்  உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, வெள்ள நீரை உடனடியாக வெளியேற்றப்படாததற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  முதல் மந்திரி நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளார்.


Next Story