"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்


உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்  காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:56 AM IST (Updated: 17 Oct 2019 10:56 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர், ஐ.நா. விவகாரங்களுக்கான கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து உண்மைகளை மறைந்து சேற்றை வாரி இறைப்பதாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

செர்பியாவின் பெல்கிரேடில் நாடாளுமன்ற ஒன்றியத்தின் 141 வது  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்தியநாடாளுமன்றக் குழு கலந்துகொண்டது.  

சபாநாயகர் ஓம் பிர்லா பேசும் போது  இந்தியாவின் வளர்ச்சியையும், பல்வேறு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளையும்  அதன் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

குழுவில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மீது எண்ணற்ற எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு நடத்தி உள்ளது. ஆனால் தற்போது சர்வதேச சட்டத்தை மதிப்பவர் போல் முகமூடி அணிய  முயற்சிப்பது முரணாக உள்ளது.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்த பாகிஸ்தான் தூதுக்குழு கருத்துக்கள் சேற்றை வாரி இறைப்பது  போல் உள்ளது. 370 பிரிவு ரத்து என்பது  இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்,பாகிஸ்தான் பிரச்சாரம் செய்யப்படும் தவறான கதையை வெளிப்படையாக நிராகரிக்கிறோம்.

பாகிஸ்தானிய தூதுக்குழு உண்மைகளை அப்பட்டமாக தவறாக சித்தரிக்கிறது. தனது சொந்த குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், பிராந்திய அபிலாஷைகளுக்காகவும் தனது நாட்டால் நடத்தப்பட்ட தவறான கதைகளை மீண்டும் மீண்டும் கூறி வருகிறது இதற்காக நான் வேதனையடைகிறேன்.  பாகிஸ்தான் ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளது. இந்திய பிரதிநிதிகள் அத்தகைய விவகாரங்களை வெளிப்படையாக நிராகரிக்கின்றனர் மற்றும் கடுமையாக கண்டிக்கின்றனர்,

ஐ.நா.வால் பட்டியலிடபட்ட  130 பயங்கரவாதிகள் வசிக்கும் பாகிஸ்தான், பட்டியலிட்ட 25 பயங்கரவாத அமைப்புகள் உள்ள நாடு. தற்போது  மனித உரிமை மீறல் குறித்து பேசுகிறது.

பயங்கரவாதம் மனித உரிமைகளை அழிக்கக் கூடிய ஒரு நாட்டின்  பிரதிநிதியிடமிருந்து மனித உரிமைகளுக்கான மரியாதை பற்றி கேட்பது வெளிப்படையாக அபத்தமானது. இந்த மன்றத்திலிருந்து நாங்கள் சிறப்பான பதிலை எதிர்பார்க்கிறோம்.

சர்வதேச சட்டத்தின் கீழ் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் அல்லது பிப்ரவரி 1999 இன் லாகூர் ஓப்பந்தம் ஆகியவைகளை பாகிஸ்தான் அப்பட்டமாக புறக்கணிக்கிறது  என கூறினார்.




Next Story