நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதா? -பிரதமர் மோடி கண்டனம்
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
மராட்டிய மாநிலம் பார்லியில் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் முடிவை ஒரு தலைவர் இந்திய அரசியலுக்கு இது ஒரு கருப்பு நாள் என்று கூறினார். மற்றொருவர் இது ஜனநாயகத்திற்கு எதிரானது, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்றார். அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நமது போட்டி நாட்டிற்கு யோசனைகளை அளித்து வருகின்றனர்.
அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் முடிவு, நாட்டை அழித்துவிடும் என ஒரு காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளார். இந்த முடிவை எடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு என்ன அழிந்தா போய்விட்டது.
370ஆவது பிரிவை ரத்து செய்யும் முடிவால் காஷ்மீரை இழக்க நேரிடும் என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். இப்போது இந்தியா காஷ்மீரை இழந்துவிட்டதா?
காஷ்மீர் சென்று பார்க்க விரும்பினால் அதற்கான ஏற்பாட்டை நான் செய்து தருகிறேன். காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு பதில் இந்துக்கள் இருந்திருந்தால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை பாஜக அரசு ஒருபோதும் எடுத்திருக்காது என காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லிம் என்றா பார்க்கிறீர்கள் என கூறினார்.
Related Tags :
Next Story