சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதத்தைத் தான் காங்கிரஸ் எதிர்த்தது -மன்மோகன் சிங்


சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதத்தைத் தான் காங்கிரஸ் எதிர்த்தது -மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 17 Oct 2019 5:43 PM IST (Updated: 17 Oct 2019 5:43 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்த விதத்தைத் தான் காங்கிரஸ் எதிர்த்ததாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் சரியானது அல்ல என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஆதரவாக தான் வாக்களித்தது. அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. மத்திய அரசின் இந்த முடிவு தற்காலிகமானது தான் என்று நாங்கள் நம்புகிறோம். 

ஆனால் ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அது ஜம்மு-காஷ்மீர் மக்களின் நன்மதிப்போடு நிகழ வேண்டும். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விதத்திற்கு தான் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது” என்று கூறினார்.

Next Story