அயோத்தி வழக்கு விசாரணையின்போது வரைபடத்தை கிழித்த வக்கீல் மீது நடவடிக்கை; தலைமை நீதிபதிக்கு இந்து சாமியார் கோரிக்கை


அயோத்தி வழக்கு விசாரணையின்போது வரைபடத்தை கிழித்த வக்கீல் மீது நடவடிக்கை; தலைமை நீதிபதிக்கு இந்து சாமியார் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2019 4:41 AM IST (Updated: 18 Oct 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் அயோத்தி வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், ராமர் பிறந்த இடத்தை குறிக்கும் வரைபடத்தை கிழித்து எறிந்தார்.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இந்து சாமியார் அஜய் கவுதம் என்பவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராமர் பிறந்த இடத்தை குறிக்கும் வரைபடத்தை கிழித்ததன்மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை ராஜீவ் தவான் புண்படுத்தி உள்ளார். அவரது செயல், அவமதிக்கக்கூடியது, சட்டவிரோதமானது. ஆகவே, அவரது மூத்த வக்கீல் என்ற அந்தஸ்தை ரத்துசெய்ய வேண்டும். அவர் வக்கீல் தொழில் செய்வதற்கான உரிமத்தை பறிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story