சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து உள்ளார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிய ஒரு மாதம் உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீதிபதி கோகாய், தனது கடிதத்தில் நீதிபதி எஸ்.ஏ.போப்டேவை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும் பணியை அரசாங்கம் தொடங்க பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ரஞ்சன் கோகாய் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்.
நீதிபதி கோகாய்க்குப் பிறகு நீதிபதி பாப்டே சீனியாரிட்டியில் 2 வது இடத்தில் உள்ளார். நீதிபதி பாப்டே மத்திய பிரதேச ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் 2021 ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.
Related Tags :
Next Story