தேசிய செய்திகள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை + "||" + UP CM Yogi bans mobile phone in all colleges, universities in state

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
லக்னோ 

உத்தரபிரதேச உயர் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்லூரி நேரங்களில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுவதை அரசு கவனித்து வந்தது. அதன் அடிப்படையில் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை உறுதி செய்வதற்காக மொபைல்போனுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள்  மாணவர்கள் இனி செல்போன்களை எடுக்கவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தடை மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் 3 வருடத்தில் 119 என்கவுன்டர்கள்; அனைத்திலும் சட்ட மீறல்கள்
உத்தரபிரதேசத்தில் 3 வருடத்தில் 119 என்கவுன்டர்கள் அனைத்திலும் உரிய செயல்முறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் சாவு; 2 ரவுடிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
உத்தரபிரதேசத்தில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் நடந்த சண்டையில் 2 ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்தது: 9 பேர் காயம்
உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.