யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது -பிரதமர் மோடி கிண்டல்


யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது -பிரதமர் மோடி கிண்டல்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:24 AM GMT (Updated: 18 Oct 2019 10:24 AM GMT)

தற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

சோனிபட்

பிரதமர் நரேந்திர மோடி இன்று  அரியானாவின் சோனிபட்டில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றினார், அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பகுதி ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது, அது மல்யுத்த வளையத்தில் சண்டையிட்டாலும் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடினாலும் சரி. சோனிபட் என்றால் ''விவசாயி, இளைஞன், மல்யுத்த வீரர்'  என்று அர்த்தம்.

காங்கிரஸ் ஆட்சியில்  ராணுவ வீரர்களோ விவசாயிகளோ அல்லது எங்கள் விளையாட்டு வீரர்களோ பாதுகாப்பாக இல்லை. காங்கிரஸ் விவசாயத்தில் ஊழலில் ஈடுபட்டது மற்றும் விளையாட்டுகளில் மோசடிகளை செய்தது.

தூய்மை இந்தியா அல்லது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி நாம் பேசும்போது காங்கிரசுக்கு வயிற்று வலி வரும், தற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கத் தொடங்குகிறது.

உலகளவில் தங்கள் வழக்கை வலுப்படுத்த பாகிஸ்தான் அவற்றைப் பயன்படுத்துகிறது, இது என்ன வகையான கெமிஸ்ட்ரி? என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் அரியானாவில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. சோனியா காந்திக்கு பதிலாக, ராகுல் காந்தி இப்போது அரியானாவின் மகேந்திரகரில் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அக்டோபர் 21 ம் தேதி மராட்டியம், அரியானா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 24 ம் தேதி நடைபெறுகிறது.

Next Story