தேசிய செய்திகள்

சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி! + "||" + woman sells her husband for rs 5.lakhs

சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி!

சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி!
தமிழில் வெளிவந்த இரட்டை ரோஜா சினிமா படம் போல் ரூ.5 லட்சத்துக்கு கணவனை ஒரு மனைவி விற்பனை செய்து உள்ளார்.
சென்னை

1996-ல் வெளிவந்த தமிழ் திரைப்படம்  இரட்டை ரோஜா. ராம்கி, ஊர்வசி, குஷ்பூ ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஊர்வசி-ராம்கி கணவன்  மனைவியாக நடித்து உள்ளனர். இதில் பண பைத்தியமாக நடித்து இருப்பார் ஊர்வசி. ராம்கியின் முதலாளி குஷ்பு ஒரு கோடி பணத்திற்கு ராம்கியை விட்டுத்தரும்படி ஊர்வசியிடம் பேரம் பேசுகிறார். பணத்தின் மீது ஆசை கொண்ட ஊர்வசி இதற்கு சம்மதிப்பதோடு ராம்கியை குஷ்பு திருமணம்  செய்யும்படி வற்புறுத்துகிறார். ராம்கி  இதனை மறுக்க தற்கொலை செய்யச் செல்கிறார். இதனால் ராம்கி கனத்த மனதோடு குஷ்புவை  திருமணம் செய்ய சம்மதிக்கிறார். குஷ்பு மீது காதலும் கொள்கிறார். இதன்பின்னரே தான் செய்தது தவறு என ஊர்வசி உணர்வதோடு ராம்கியோடு  திரும்பவும் சேர்வதற்கு விரும்புவார்.

இந்த சினிமாவைப்போலவே ஒரு சம்பவம் போல் கர்நாடக மாநிலத்தில் நடந்து உள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார்.

முதலில் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாத மனைவி, பின்னர் தொகையை உயர்த்தியுள்ளார். ரூ.17 லட்சம் தொடங்கி பேரம் நடந்து ஒருவழியாக ரூ.5 லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை அறிந்துகொண்ட கணவருடன் வசிக்கும் பெண், அவரிடம் நைசாக பணம் கொடுக்கிறேன் என்றும், கணவரை விட்டுத்தரும்படியும் பேசியுள்ளார்.