தேசிய செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள் நாடு கடத்தல் - டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர் + "||" + Deportation of 311 Indians who tried to enter the United States illegally - Arrived at Delhi Airport

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள் நாடு கடத்தல் - டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள் நாடு கடத்தல் - டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்.
புதுடெல்லி,

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் மெக்சிகோ சென்று, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக ஊடுருவி வந்தனர்.

இப்படி பிற நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவினுள் ஊடுருவ மெக்சிகோ எல்லையை பயன்படுத்தினால், மெக்சிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.


அதைத் தொடர்ந்து மெக்சிகோ, தனது எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு பெண் உள்பட 311 இந்தியர்கள் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதற்காக மெக்சிகோவுக்கு சென்றனர். அவர்களை எல்லைப்பகுதியில் பிடித்த மெக்சிகோ நிர்வாகம், உடனடியாக விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தது.

அவர்கள் அனைவரும் நேற்று காலை 5 மணிக்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் வகுப்புகள் - வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது; அமெரிக்கா
ஆன்லைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது- மைக் பாம்பியோ
டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது அமெரிக்கா குறித்து ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.
3. அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
5. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.