அத்துமீறி நுழைந்த வழக்கில் டெல்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை


அத்துமீறி நுழைந்த வழக்கில் டெல்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை
x
தினத்தந்தி 19 Oct 2019 2:59 AM IST (Updated: 19 Oct 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

அத்துமீறி நுழைந்த வழக்கில் டெல்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்ற சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் (வயது 72). டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய நாளான 2015-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி கோயல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் மணீஷ்காய் என்ற கட்டுமான அதிபர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க மதுபாட்டில்கள், போர்வைகள் போன்ற பொருட்களை பதுக்கிவைத்திருப்பதாக கூறி அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கோயல் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு, கோயல் உள்பட 4 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனை விதிப்பதாக கூறிய அவர், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story