கார்பரேட் வரியை குறைத்த இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐ.எம்.எப் ஆதரவு
கார்பரேட் வரியை குறைத்த இந்தியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியமான (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு கட்டமாக
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.
எந்த ஊக்கத்தொகையும், சலுகைகளும் பெறாத உள்நாட்டு நிறுவனங்கள் 22 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தினால் போதும். அக்., 1க்கு பிறகு துவங்கப்படும் புதிய உள் நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 17.01 சதவீதமும், எந்த சலுகையும் பெறாதாவர்களுக்கு 15 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் கார்பரேட் வரிகுறைப்பு நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரிகுறைப்பு மூலம் முதலீட்டில் சாதகமான தாக்கம் ஏற்படும் எனவும் ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியா, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிதி நிலையில் நீண்ட காலை நிலைத்தன்மை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.
கடந்த இரு காலாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story