எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. நேற்று இரவு 7.30 மணி முதல் இரவு முழுவதும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் நீடித்ததாகவும் இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில், இந்திய தரப்பில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story