சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்


சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2019 8:06 PM GMT (Updated: 19 Oct 2019 8:06 PM GMT)

சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்கப்பட்ட சம்பவத்தில், டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கத்துக்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்தார். உடனடியாக பூங்கா ஊழியர்கள் அதிரடியாக செயல்பட்டு அவரை மீட்டனர். பூங்காவின் இயக்குனர் ரேணு சிங் மேற்பார்வையில் இந்த மீட்பு நடவடிக்கை நடந்தது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ரேணு சிங்கை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் வனத்துறை டி.ஐ.ஜி.யாக மத்திய அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.

1997-ம் ஆண்டு உத்தரபிரதேச பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான ரேணு சிங், டெல்லி உயிரியல் பூங்காவின் முதல் பெண் இயக்குனராக கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டு இருந்தார்.

Next Story