பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் - பிரதமர் மோடி உறுதி


பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் - பிரதமர் மோடி உறுதி
x
தினத்தந்தி 19 Oct 2019 10:45 PM GMT (Updated: 19 Oct 2019 9:16 PM GMT)

பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தில் சார்கி டாத்திரி என்ற ஊரில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்தியாவுக்கு உள்ள பங்கீட்டில் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் இங்குள்ள விவசாயிகளுக்கே பயன்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கு உரிமையுள்ள பங்கு நதிநீர், பாகிஸ்தானுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இனிமேல் இது நடக்காது. இந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கும், குறிப்பாக அரியானா விவசாயிகளுக்கும் சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. மோடி அதை நிறுத்தி, உங்கள் குடும்பங்களுக்கு கொண்டு வருவார். இந்த தண்ணீர் அரியானா, ராஜஸ்தான் விவசாயிகளுக்கு சொந்தமானது. நாட்டுக்கு சொந்தமானது. அதை பெறுவோம். இதை பெறுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

மோடி பேசும்போது, பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிநீர் முழுவதையும் அனுப்பமாட்டோம் என்று சொல்லவில்லை. இந்தியாவின் பங்குக்குரிய தண்ணீரைத்தான் முழுமையாக இந்திய விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story