பிரதமர் மோடியின் துருக்கி நாட்டு பயணம் திடீர் ரத்து
பிரதமர் மோடியின் 2 நாள் துருக்கி நாட்டு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் 2 நாள் துருக்கி நாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி துருக்கி சென்று அங்கு அக். 27 , 28 ஆம் தேதிகளில் நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது, ஆனால் செப்டம்பர் மாதம் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக துருக்கி அதிபர் எண்ட்ரோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story