வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் இணையதள சேவையை முடக்க வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் இணையதள சேவையை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை சுற்றிய பகுதியில் இணையதள சேவையை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி சார்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், மராட்டிய சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் ‘ஹேக்’ செய்யப்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளை சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு இணையதள சேவையை முடக்கி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story