மராட்டிய மாநில தேர்தல்: வாக்களித்தார் சச்சின் தெண்டுல்கர்


மராட்டிய மாநில தேர்தல்: வாக்களித்தார் சச்சின் தெண்டுல்கர்
x
தினத்தந்தி 21 Oct 2019 8:41 AM GMT (Updated: 21 Oct 2019 8:41 AM GMT)

மும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் சச்சின் தெண்டுல்கர் வாக்களித்தார்.

மும்பை,

மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன. வாக்குப்பதிவு தொடங்கியது முதல்  வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி, மகனுடன் வாக்களித்தார்.

Next Story