சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு


சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2019 7:09 PM IST (Updated: 21 Oct 2019 7:09 PM IST)
t-max-icont-min-icon

மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 %, மராட்டியத்தில் 60.5 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மும்பை,

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு  நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற போதிலும், 6 மணிக்கு முன்பே வந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

மாலை 6 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 60.5 சதவீத வாக்குகளும், அரியானாவில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குகள் சில இடங்களில் இன்னும் பதிவாவதால், வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Next Story