வன்முறையை தூண்டும் 67 சமூக வலைத்தளங்கள் முடக்கம்


வன்முறையை தூண்டும் 67 சமூக வலைத்தளங்கள் முடக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2019 1:56 AM IST (Updated: 22 Oct 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

வன்முறையை தூண்டும் 67 சமூக வலைத்தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை தகவல்களை பதிவிடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மாநில போலீசார் எச்சரித்து உள்ளனர்.

அயோத்தி வழக்கில் இறுதி விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளி வருவதாலும், அதுதவிர அங்குள்ள வலதுசாரி இந்துத்துவா கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலையால் ஏற்பட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாத காரணங்களாலும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. ஒ.பி.சிங் கூறும்போது, “பாதுகாப்பு நலன் கருதி கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை சமூக வலைத்தள குற்றங்கள் தொடர்பாக 14 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, 67 சமூக வலைத்தள கணக்குகளை முடக்கி உள்ளோம். மேலும் சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட 4 பேரை கைது செய்து இருக்கிறோம். தவறான பதிவுகளை இணையதளங்களில் பதிவிடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும்“ என்றார்.

Next Story