ரூ.600 கோடி ஊழல் குற்றவாளியான திரிபுரா முன்னாள் மந்திரி மருத்துவமனையில் அனுமதி
ரூ.600 கோடி ஊழல் வழக்கில் குற்றவாளியான திரிபுரா முன்னாள் மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அகர்தலா,
திரிபுராவில் பிப்லப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாதல் சவுத்ரி. முன்னாள் பொது பணிகள் துறை மந்திரியாக இருந்த இவர் கடந்த 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ரூ.600 கோடி ஊழல் செய்துள்ளார் என வழக்கு பதிவானது.
இவருடன் முன்னாள் தலைமை செயலாளர் யஷ்பால் சிங் இருவரையும் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, இவருக்கு முன்ஜாமீன் வழங்க மேற்கு திரிபுரா செசன்ஸ் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அகர்தலா நகரில் உள்ள ஐ.எல்.எஸ். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அவர் நேற்றிரவு சேர்க்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story