இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது - ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி
மும்பை பயங்கரவாத தாக்குதல் போல் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா "ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை" என்று ராணுவமந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கடற்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க கடற்படை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது.
நாம் ஒருபோதும் யாரையும் ஆக்கிரமிக்கவில்லை, இந்தியா யாரிடமிருந்தும் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட எடுத்து கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், நாட்டிற்கு எதிரான எந்தவொரு தீய சக்திகளுக்கும் பொருத்தமான பதிலை வழங்க இந்திய ஆயுதப்படைகள் முழு திறன் கொண்டவையாக உள்ளது.
உள்நாட்டுமயமாக்கல் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நாம் இறக்குமதியில் சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story