தேசிய செய்திகள்

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு + "||" + PM Modi meets Nobel laureate Abhijit Banerjee

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பொருளாதார துறையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி,

இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவருடைய மனைவியும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவருமான எஸ்தர் டப்லோ, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி, அவரை உருவாக்கியதற்காக கொல்கத்தா மாநிலம் பெருமை அடைந்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் இன்று அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். அபிஜித்தின் சாதனைகளால் இந்தியா பெருமையடைந்துள்ளதாகவும், மனித உரிமைகள் குறித்த அவரது சிந்தனைகள் மிகத்தெளிவாக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு அருமையாக அமைந்தது. மனித உரிமைகள் குறித்த மிகத்தெளிவான சிந்தனைகள் கொண்டவர் அவர். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அவரது சாதனைகளால் இந்தியா பெருமையடைந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊடகங்கள் உங்களுக்கு வலை விரிக்கும் என பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறினார்- அபிஜித் பானர்ஜி
ஊடகங்கள் உங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி கூறினார்.
2. அபிஜித் பானர்ஜி குறித்து விமர்சனம்: பியூஸ் கோயலை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி
அபிஜித் பானர்ஜி குறித்து விமர்சனம் செய்த மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயலை ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
3. பொருளாதார துறையில் இந்தியருக்கு நோபல் பரிசு
பொருளாதார துறையில் இந்தியர் உள்பட 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பொருளாதார துறைக்கான நோபல் பரிசை நோபல் பரிசு குழு நேற்று அறிவித்தது.
4. சிலையை பார்வையிட்ட தேவே கவுடாவுக்கு மோடி பாராட்டு
சிலையை பார்வையிட்ட தேவே கவுடாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
5. சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு
சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம் என்று குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.