சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது


சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2019 4:17 PM IST (Updated: 22 Oct 2019 4:17 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவரிடம் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரோஸ்புர்,

பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய  இந்திய பகுதிக்குள் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களைக் கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர், இருவரையும் பிடித்துச்சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இருவரும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதும் அவர்களது பெயர் லதீப் மற்றும் சைப் என்பது தெரியவந்தது. இருவரும் கவனக்குறைவாக எல்லையை தாண்டி வந்தனரா? அல்லது ஏதேனும்  சதித்திட்டத்துடன் இந்தியாவுக்குள் நுழைந்தனரா? என்பது பற்றி எல்லைப்பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story