ஊடகங்கள் உங்களுக்கு வலை விரிக்கும் என பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறினார்- அபிஜித் பானர்ஜி
ஊடகங்கள் உங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி கூறினார்.
புதுடெல்லி,
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அபிஜித் பானர்ஜியிடம் செய்தியாளர் ஒருவர் இந்திய பொருளாதார நிலை தொடர்பாக அபிஜித் கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த அபிஜித் பானர்ஜி,
“ பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. அவருக்கு எதிரான கருத்துக்களை நான் கூறும் வகையில் ஊடகங்கள் சிக்க வைக்க முயற்சிக்கும் என்று பிரதமர் மோடி என்னிடம் நகைச்சுவையாக கூறினார். அவர் (மோடி) தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், நான் இதுதொடர்பான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப்போவதில்லை “ என்றார்.
Related Tags :
Next Story