தீபாவளி நெருங்குவதையொட்டி சீன பட்டாசு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
தீபாவளி நெருங்குவதையொட்டி சீன பட்டாசு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளி நெருங்குவதையொட்டி சீன பட்டாசு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய சுங்கத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில்,
சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதோ, விற்பனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும். சீன பட்டாசுகளை பதுக்கி வைத்தல், பயன்படுத்துதல் கூடாது.
சீன பட்டாசில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. சீன பட்டாசை வாங்கி விற்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். சீன பட்டாசு விற்பனை குறித்து புகார் அளிக்க 044 - 25246800 எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story