ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் : ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் 3 பேரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற பகுதிக்குள் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story