தேசிய செய்திகள்

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் + "||" + ED case of INX Media; P Chidambram has moved a bail plea in Delhi High Court

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார்.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ந் தேதி கைது செய்தது. அமலாக்கப்பிரிவு வழக்கில் அவரை இன்று (24-ந் தேதி) வரை காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியும் அவரால் விடுதலையாக முடியவில்லை.

இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கோ, தலைமறைவாவதற்கோ வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய போது, விசாரணை கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் கூறி உள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் நிதி பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்துதான் விசாரித்து வருகின்றன. அப்படி இருக்கும் போது இரு விசாரணை அமைப்புகளும் அவரை தனித்தனியாக காவலில் வைத்து விசாரிக்க முடியாது.

ஆதாரங்களை அழிக்கவோ, சாட்சியங்களை கலைக்கவோ மனுதாரர் ஒருபோதும் முயன்றது இல்லை. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் விசாரணை அமைப்புகளிடம் இருப்பதால் அவற்றை திருத்தவோ, அழிக்கவோ முடியாது.

அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு ப.சிதம்பரம் எப்போதும் ஒத்துழைப்பு அளித்து வந்து இருக்கிறார். 74 வயதான அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அமலாக்கப்பிரிவு வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே ப.சிதம்பரத்துக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விசாரணைக்கு ஆஜராகாததால் சிறையில் அடைக்கப்பட்ட, பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு வழங்கியது
விசாரணைக்கு ஆஜராகாததால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
2. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
3. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் ஜாமீனில் விடுதலை
சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
4. அமலாக்க துறை காவல்; ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு, மேற்கத்திய கழிவறைக்கு நீதிமன்றம் அனுமதி
அமலாக்க துறை காவலில் உள்ள ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளுக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
5. சினிமா தயாரிப்பாளருக்கு ஜாமீன் பெற ராமநாதபுரம் கோர்ட்டில் போலிச்சான்று கொடுத்த 2 பேர் கைது
சிறையில் உள்ள சினிமா தயாரிப்பாளருக்கு ஜாமீன் கேட்டு ராமநாதபுரம் கோர்ட்டில் போலிச்சான்று கொடுத்த 2 பேர், நீதிபதியின் நடவடிக்கையால் சிக்கினார்கள்.