இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க காலிஸ்தானி சார்பு குழுக்களுடன் கைகோர்த்துள்ள பாகிஸ்தான்


இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க காலிஸ்தானி சார்பு குழுக்களுடன் கைகோர்த்துள்ள பாகிஸ்தான்
x
தினத்தந்தி 23 Oct 2019 7:06 AM GMT (Updated: 23 Oct 2019 7:06 AM GMT)

இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க காலிஸ்தானி சார்பு குழுக்களுடன் பாகிஸ்தான் உளவுத்துறை கைகோர்த்துள்ளது.

புதுடெல்லி,

பிராந்தியத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை புதுப்பிக்கவும் தீவிரப்படுத்தவும் ஜம்மு-காஷ்மீர்  மற்றும் பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க காலிஸ்தானி சார்பு குழுக்களுடன் பாகிஸ்தான் கைகோர்த்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ,  காஷ்மீர் காலிஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு முன்னணியை உருவாக்கியுள்ளது என உளவுத்துறை  வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தானி சார்பு ஆதரவாளர்களையும், இந்த நாடுகளில் உள்ள உயர் கமிஷன்களின் உதவியை நாடவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிட பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐ.எஸ்.ஐ)  காலிஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு முன்னணியில்   இளைஞர்களை நியமிக்கவும் அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கவும் உதவுகிறது என்று புலனாய்வு வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் உளவுத்துறை கே 2 திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மற்றும் காலிஸ்தானில்  ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்க தீவிரமாக முயற்சிக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் பஞ்சாப் மற்றும்  ஜம்மு காஷ்மீர்  எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானங்கள் எல்லைப் பாதுகாப்புப் படையால்  தடுத்து நிறுத்தப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Next Story