பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வீடியோ!


பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை:  வீடியோ!
x
தினத்தந்தி 23 Oct 2019 1:29 PM IST (Updated: 23 Oct 2019 1:29 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின நலவாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில பழங்குடியின நலத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை தொடங்குவதற்கு முன்னதாக, கவர்னர் மாளிகைக்கு வந்திருந்த பழங்குடியினப் பெண்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார். இதன் பின்னர் அவர்,  அப்பெண்களுடன் இணைந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார்.

பழங்குடியின பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப அப்பெண்களுடன் கை கோர்த்துக்கொண்டு நடனமாடிய காட்சிகளை தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அப்பதிவில், பழங்குடியினப் பெண்களுடன் நடனமாடியது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story