எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கே ஓட்டு: பொய் தகவல் பரப்பியதாக வாக்குச்சாவடி முகவர் மீது வழக்கு


எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கே ஓட்டு: பொய் தகவல் பரப்பியதாக வாக்குச்சாவடி முகவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Oct 2019 2:01 AM IST (Updated: 24 Oct 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கே ஓட்டு என பொய் தகவல் பரப்பியதாக வாக்குச்சாவடி முகவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனே,

மராட்டியத்தில் கடந்த 21-ந் தேதியன்று நடந்த சட்டசபை தேர்தலின் போது, காலியாக இருந்த சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

அந்த தொகுதிக்குட்பட்ட நவ்லேவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டவர்கள் தாங்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும், பா.ஜனதாவுக்கே ஓட்டு விழுந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டது.

ஆனால் ஓட்டுகள் அனைத்தும் பா.ஜனதாவுக்கே விழுந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அங்கு பணியில் இருந்த தேர்தல் நடத்தும் அதிகாரி கிர்த்தி நலவாடே திட்டவட்டமாக மறுத்தார். இந்தநிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதாவுக்கே ஓட்டு விழுந்ததாக மக்களிடம் தவறான மற்றும் பொய்யான தகவலை பரப்பியதாக அந்த வாக்குச்சாவடியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் முகவர் தீபக் ரகுநாத் பவார் மீது புசேகாவ் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story