இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்


இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் வருமாறு:-

* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது.

* அதேபோல குழந்தைகளுக்கும், மிக பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது.

* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மிக குறைந்த அளவான பொருளாதார குற்றங்களே சென்னையில் நிகழ்ந்துள்ளது.

* கணினி வழி குற்றங்களும் இங்கு மிக குறைந்த அளவே நடந்துள்ளது.

* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் கொடூரமான குற்றங்கள் மிக குறைந்த அளவே சென்னையில் நடந்துள்ளன.

* பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே நிகழ்ந்து இருக்கின்றன.

* பழங்குடியினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் சென்னையில் நிகழவில்லை.

* இந்திய தண்டனை சட்ட பிரிவின் (ஐ.பி.சி.) கீழான குற்றங்களில் மிக குறைவான அளவு குற்றங்களே நிகழ்ந்துள்ளதுடன், ஐதராபாத்துக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story