தேசிய செய்திகள்

சிவசேனாவுடன் இணைய போவதில்லை; சரத் பவார் பேட்டி + "||" + NCP President, Sharad Pawar: We will not go with Shiv Sena

சிவசேனாவுடன் இணைய போவதில்லை; சரத் பவார் பேட்டி

சிவசேனாவுடன் இணைய போவதில்லை; சரத் பவார் பேட்டி
சிவசேனாவுடன் இணைய போவதில்லை என சரத் பவார் பேட்டியளித்து உள்ளார்.
நாக்பூர்,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்த பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் என்கிற வகையில் இந்த தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி-சிவசேனா கூட்டணி ஓரணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

தேர்தல் களத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.  இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

மராட்டிய சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் பா.ஜ.க. கூட்டணி மதியம் 2 மணிநேரப்படி 162 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இதேபோன்று காங்கிரஸ் கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.  பிற கட்சிகள் 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறும்பொழுது, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி மற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து முடிவு செய்வோம்.  சிவசேனாவுடன் இணைய போவதில்லை என பேட்டியளித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தலாம் - பிரதமருக்கு சரத்பவார் யோசனை
நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று என்று பிரதமர் மோடிக்கு சரத்பவார் யோசனை தெரிவித்தார்.
2. மாநிலங்களவை எம்.பி. தேர்தல் சிவசேனா, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு பா.ஜனதா சார்பில் பகவத் காரட் மனு தாக்கல்
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட சிவசேனா, காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். பா.ஜனதா சார்பில் பகவத் காரட் மனு தாக்கல் செய்தார்.
3. ‘சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம்’ சுதீர் முங்கண்டிவார் ஒப்புதல்
சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம் என சட்டசபையில் பா.ஜனதா தலைவர் சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
4. மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே இன்று அயோத்தி பயணம்
சிவசேனா தலைமையிலான அரசின் 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து, அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக உத்தவ் தாக்ரே தெரிவித்து உள்ளார்.
5. டெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய்விட்டார் -சிவசேனா தாக்கு
டெல்லி வன்முறை சம்பவத்தின் போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காணாமல் போய் விட்டதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.