மராட்டிய தேர்தல்: பாஜக மந்திரி பங்கஜா முண்டே தோல்வி


மராட்டிய தேர்தல்: பாஜக மந்திரி பங்கஜா முண்டே தோல்வி
x
தினத்தந்தி 24 Oct 2019 10:10 AM GMT (Updated: 24 Oct 2019 10:41 AM GMT)

மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

மும்பை, 

மராட்டிய சட்டமன்றத்துக்கு கடந்த  21 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (24-ஆம் தேதி) எண்ணப்பட்டன.  ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாஜகவைச்சேர்ந்தவரும்  ஊரக மேம்பாடு மற்றும் பெண்கள், குழந்தைகள் நல மந்திரியுமான பங்கஜா முண்டே தோல்வியை தழுவியுள்ளார்.

மறைந்த, பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா  முண்டே பார்லி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில், தனஞ்செய் முண்டே போட்டியிட்டார். இவர், பங்கஜா  முண்டேவின் பெரியப்பா மகன் ஆவார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, பின்னடைவை சந்தித்த பங்கஜா  முண்டே, சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  தனஞ்செய் முண்டேவிடம் தோல்வியை தழுவினார்.

Next Story